யோசித்தவுக்கு எதிராக குற்றப் பத்திரிகை

நிதி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்படி, யோசித்தவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில், பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் படி, யோசித்த உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

About The Author

Add Comment