வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக, வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தைச் சேர்ந்த சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள், இன்று (திங்கட்கிழமை) இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

வட மாகாணத்தில் சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் உள்ள நிலையில், பல தடவைகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தும் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையென இவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

அத்துடன், தமது கோரிக்கைகள் மற்றும் வட மாகாணத்தில் காணப்படும் பதவி வெற்றிடங்கள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரமொன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், தமது பிரச்சினைக்கு நல்லாட்சி அரசாங்கம் உரிய தீர்வை வழங்கவேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து, அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில் நந்தனன் மற்றும் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Related Posts

About The Author

Add Comment