பொறுப்புக்கூறல் இன்றி நல்லிணக்கமோ நல்லிணக்கம் இன்றி பொறுப்புக்கூறலோ சாத்தியமில்லை

ஆசியாவிலேயே வலுவான பாராளுமன்றமாக இலங்கைப் பாராளுமன்றம் விரைவில் மாறும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற பொதுநலவாய பிராந்திய கருத்தரங்கு தொடக்க விழாவின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், நாட்டில் நல்லிணக்கத்தையும், பொறுப்புக்கூறலையும் ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் முழுமையான அணுகுமுறையின் நோக்கம், எனவும் இங்கு தொடர்ந்தும் பிரதமர் கருத்து வௌியிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையில் பொறுப்புக்கூறல் இன்றி நல்லிணக்கம் சாத்தியமில்லை, நல்லிணக்கம் இன்றி பொறுப்புக்கூறல் சாத்தியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

நாட்டில் மனித உரிமைகளை மீள ஏற்படுத்தி அதனை வலுப்படுத்துவதற்கான ஆணையை, இலங்கை மக்கள் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளனர் எனவும், பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பமாகியுள்ள இந்த கருத்தரங்கு எதிர்வரும் 3ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

மேலும் இதில், இலங்கை, இந்தியா, மாலைதீவு பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற ஏனைய ஆசிய நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை நிபுணர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

About The Author

Add Comment