போதையற்ற நாட்டினை உருவாக்குவதே அரசின் உறுதி!

நாட்டின் அரசாங்கம் என்ற ரீதியில் போதைப் பாவனையற்ற நாடொன்றினை உருவாக்குவதே இந்த அரசாங்கத்தின் குறிக்கோளாகும் என வயம்ப மாகாணத்தின் திட்டப் பணிப்பாளர் ஷாந்த பண்டார தெரிவித்தார்.

இன்று (01) அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் எமது நாடு இலங்கை தற்போது சமாதானம் மிக்க நிலையானதொரு நாடாக விளங்குகின்றது. நாட்டு மக்களும் எவ்வித பிரச்சினைகளுமின்றி சமாதான காற்றை சுவாசித்து வருகின்றனர். தமது எதிர்காலம் குறித்தும் பல திட்டங்களை முன்னெடுத்து வாழக்கூடிய சூழ்நிலையிலுள்ளனர். நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு தறபோது எவ்வித சர்வதேச அச்சுறுத்தல்களும் இல்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் இன்னும் சில வருடங்களில் முற்றிலும் போதைப்பாவனையற்ற நாட்டினை உருவாக்குவதில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வகையில், சட்டரீதியற்ற வகையில் போதைப்பொருட்களை உருவாக்குவதோ பரிமாறுவதோ தற்போது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் எவ்வளவுக்கு எவ்வளவு போதைப் பாவனையை குறைக்கின்றோமோ அவ்வளவு தூரம் நாட்டில் வறுமையையும் இல்லாதொழிக்க முடியும். ஏனெனில் சிலர் தாம் உழைக்கின்ற முழுப் பணத்தினையும் போதைப் பொருள் கொள்வனவுக்கே செலவிடுகின்றனர். இதனால் பிள்ளைகளின் கல்வி, குடும்ப நிலைமைகளை கவனிக்க மறந்து விடுகின்றனர். எனவே போதைப் பொருளற்ற நாட்டினை உருவாக்குவதன் மூலம் நாட்டில் வறுமையையும் இல்லாதொழித்து மக்கள் செழிப்புடன் வாழ வழி செய்யலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

[b]BPK[/b]

Related Posts

About The Author

Add Comment