பாலா எதையும் கேட்கலையே?

வாடி வாசல்ல வரட்டி காய வச்சா மாதிரி ஆகிவிட்டது தாரை தப்பட்டையின் ரிசல்ட்!

ஆனாலும் ஒரே சந்தோஷம் வரலட்சுமிக்கு மீடியாக்கள் கொடுத்த நல்ல விமர்சனங்கள்தான். அதற்கப்புறம் படங்கள் வந்து குவிய வேண்டியதுதானே? மண்ணாங்கட்டி. சும்மாச்சுக்கும் கூட ஒரு டைரக்டரும் போன் அடிக்கவில்லையாம் வருவுக்கு. இதெல்லாம் ஒரு புறம் மனசை அரித்துக் கொண்டிருந்தாலும், ஒரு போன் வந்து எல்லா வெப்பத்தையும் தணித்துவிட்டது. பேசியவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. தாரை தப்பட்டை பார்த்தேன். உன் நடிப்பு பிரமாதம் என்று பாராட்டினாராம். ஆ ஹூ என்று சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க ஆரம்பித்துவிட்டார் வரலட்சமி.

இந்த விஷயத்தை அவரே ட்விட் பண்ணி நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்தியிருக்கிறார். இதற்கிடையில் இந்த படத்தின் கதை விவாதத்திற்காக போயிருந்த இயக்குனர்கள் நலன் குமரசாமியும், கார்த்திக் சுப்புராஜும் ஒரு கேள்விக்குதான் விடையளிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். நீங்களே ஸ்டோரி டிஸ்கஷன்ல இருந்திருக்கீங்க, அப்படியுமா இப்படியொரு படம் என்ற கேள்விதான் அவர்களை துரத்துகிறதாம். நாங்க சொல்லி எதையும் அவர் கேட்கலையே என்பதுதான் அவ்விருவரின் பதிலாகவும் இருக்கிறது.

Related Posts

About The Author

Add Comment