தெற்கு அதிவேகப் பாதையில் செல்லும் தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

மஹரகமவில் இருந்து தெற்கு அதிவேகப் பாதையினூடாக காலி மற்றும் மாத்தறை நோக்கி புறப்படும் தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இன்று காலை முதல் இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தனியார் பஸ் ஊழியர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரட்ன கூறினார்.

தெற்கு அதிவேகப் பாதையினூடாக செல்வதற்கு 10 பஸ்களுக்கு புதிதாக தற்காலிக வீதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக கெமுனு விஜேரட்ன கூறினார்.

குறித்த அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts

About The Author

Add Comment