இளம் பௌத்த தேரர்களின் பிரச்சினைகளை தீர்க்க குழு

இளம் பௌத்த பிக்குகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக குழுவொன்றை நியமிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இன்று காலை அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இளம் பௌத்த பிக்குகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர் அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது இதனைக் கூறியுள்ளார்.

மஹா சங்கத்தினரின் நடவடிக்கைகளில் விரலடிப்பதற்கு அரசாங்கத்திற்கு சட்டத்தில் அதிகாரம் இல்லை என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

Related Posts

About The Author

Add Comment