தமிழில் தேசிய கீதம் பாட எடுத்த தீர்மானம் அரசியலமைப்புக்கு விரோதமானதாம்!

இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு எடுத்துள்ள தீர்மானம் அரசியலமைப்புக்கு விரோதமானது என, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவரவும் முடியும் என, அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 7வது அத்தியாயத்தின் படி, இலங்கையின் தேசிய கீதம் “ஶ்ரீ லங்கா மாதா..” எனவும் 1987ம் ஆண்டின் பின்னர் அது தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடா, நியூஸிலாந்து போன்ற நாடுகளில் தேசிய கீதம் பல மொழிகளில் பாடப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு எனவும், அவ்வாறானதொரு நிலை இலங்கையில் இல்லை எனவும், அவர் மேலும் கூறியுள்ளார்.

Related Posts

About The Author

Add Comment