எம்பிலிபிடிய சம்பவம் – ஏ.எஸ்.பி கைது

எம்பிலிபிடிய பகுதியில் இடம்பெற்ற விருந்து நிகழ்வொன்றின் போது, பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில், இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்டவர்களால் அடிப்படை உரிமை மனுக்கள் நான்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, சம்பவத்தில் பலியான நபரின் மனைவி, தனது கணவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஒரு கோடி ரூபாய் நஸ்டஈடு கோரி, அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளதாக, ரயிட் டு லைப் அமைப்பின் சட்டப்பிரிவு வழக்கறிஞர் பிரசங்க பிரணாந்து தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்ததாக கூறப்படும் இருவர் 30 இலட்சம் ரூபா நஸ்டஈடு கோரி, அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அத்துடன் விருந்து இடம்பெற்ற வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மற்றுமொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன், சட்டமா அதிபர், சீ.தர்மரத்ன (உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்), எஸ்.ஆர்.ஜினேந்திர டயஸ் ( தலைமையக பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் உத்தியோகத்தர்களான ராஜபக்ஷ, ஜீனதாஸ, ஷாந்த, சாரங்க, ஜயலத், பந்துசேன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

Related Posts

About The Author

Add Comment