இலங்கைக்கு கடத்த முற்பட்டதாக கூறப்படும் ஹெரோயின் பாகிஸ்தானில் மீட்பு

இலங்கைக்கு கொண்டு வர தயாராக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ஹெரோயின் ஒருதொகை பாகிஸ்தானின் கராச்சி நகரில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

கராச்சி துறைமுகத்தின் கொள்கலன் ஒன்றில் இருந்து 21 கிலோகிராம் ஹெரோயின் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானின் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Posts

About The Author

Add Comment