அளவுக்கதிகமான பருத் தொல்லைக்கு.

அளவுக்கதிகமான பருத் தொல்லைக்கு.
* ஒரு கொத்து வேப்பிலையை எடுத்து, வெயிலில் காய வைத்து பொடி செய்து, காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும். இதில், ஒரு தேக்கரண்டி எடுத்து, முல்தானி மிட்டி, ஒரு தேக்கரண்டி தயிர் கலந்து, வாரம் இருமுறை அல்லது மூன்று முறை உபயோகிக்கவும். இதை, அரை மணி நேரம் காயவிட்டு, பிறகு விரல்களை ஈரப்படுத்தி, லேசாகத் தேய்த்து, குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவவும். தீராத பருத்தொல்லை கூட இந்த முறையில் குணமாகும்.
* ஒரு தேக்கரண்டி கோதுமை மாவை, தண்ணீரில் குழைத்து, முகத்தில் தடவி, ஈரமான விரல்களால் தேய்த்து கழுவினாலும் பருக்கள் குறையும். கோதுமைத் தவிடு ஒரு தேக்கரண்டி, சந்தனப் பவுடர் ஒரு தேக்கரண்டி, சிறிது பன்னீர் கலந்து, முகத்தில் தடவிக் காய்ந்ததும் எடுத்து விடவும்.
* நேரம் கிடைக்கும் போதெல்லாம், ஐஸ் கட்டிகளால் முகத்தை தேய்க்கவும். இது, சருமத்திலுள்ள அதிகப் படியான எண்ணெய் பசையை அகற்றும்.
* பருத்தொல்லைக்கு பொடுகும் ஒரு முக்கிய காரணம். கூந்தலை வெதுவெதுப்பான எண்ணெயால் மசாஜ் செய்து, தயிர் உபயோகித்துக் குளித்து வந்தால், பொடுகு நீங்கும்.
[img]http://vijaytamil.net/wp-content/uploads/2016/01/ddde2.jpg[/img]

Related Posts

About The Author

Add Comment