ஆண்களே! முகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க…

ஆண்கள் பலர் தங்களின் அழகைப் பராமரிக்க அதிக நேரம் செலவழிக்க மாட்டார்கள். ஏன் க்ரீம்கள், மாய்ஸ்சுரைசர்கள் என்று எதையும் பயன்படுத்தமாட்டார்கள். ஆனால் இக்காலத்தில் அதிகப்படியான மாசடைந்த சுற்றுச்சூழல் மற்றும் தூசிகளால் கட்டாயம் ஒவ்வொருவரும் சருமத்திற்கு போதிய பராமரிப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அதுமட்டுமின்றி, தற்போது சில ஆண்கள் பெண்களுக்கு இணையாக தங்கள் அழகின் மீது அக்கறை காட்டத் துவங்கியுள்ளார்கள். ஆனால் பெரும்பாலானோர் அப்படி இல்லை. அத்தகைய ஆண்களிடம் சாதாரணமாக முகத்தைக் கழுவ என்ன பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டால், 10 இல் 8 பேர், சோப்பைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று சொல்வார்கள்.

முகம் கழுவுவது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அந்த சாதாரணமான விஷயத்தில் சிறு தவறு செய்தால் கூட, சருமத்தின் ஆரோக்கியம் பாழாகும். இங்கு ஆண்களின் சரும ஆரோக்கியத்தைக் கெடுக்கும் சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிகமாக முகம் கழுவுவது

அளவுக்கு அதிகமாக முகத்தை கழுவினால், விரைவில் சருமம் முதுமையாக காட்சியளிக்கும். சோப்பு என்பது உடலுக்கு தானே தவிர, முகத்திற்கு அல்ல. நாளுக்கு ஒருமுறை முகத்திற்கு பயன்படுத்தலாம். ஆனால் அழுக்கு போக வேண்டுமென்று சோப்பைக் கொண்டு அடிக்கடி முகத்தை கழுவினால், அதனால் சருமத்தின் pH அளவு பாதிக்கப்படும். இதனால் சருமத்தின் ஈரப்பசை குறைந்து, வறட்சி அதிகரித்து, நாளடைவில் அதுவே சருமத்தை முதுமையாக வெளிப்படுத்தும். ஆகவே முகத்தைக் கழுவ மைல்டு கிளின்சரைப் பயன்படுத்தலாம்.

வாசனைமிக்க கிளின்சர்கள்

வாசனை சூப்பராக உள்ளது என்று பலர் நல்ல நறுமணமிக்க கிளின்சர்களைப் பயன்படுத்துவார்கள். உண்மையில் நறுமணம் வீசும் கிளின்சர்களில் கெமிக்கல் அதிகம் இருக்கும். எனவே அதனைக் கொண்டு முகத்தை அதிகம் கழுவினால், அது சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெயை முற்றிலும் நீக்கி, எரிச்சல் மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். உங்கள் சருமம் சென்சிடிவ் என்றால், டீ-ட்ரீ ஆயில் நிறைந்த கிளின்சரைப் பயன்படுத்துங்கள். அதுவே முகப்பரு அதிகம் இருந்தால், சாலிசிலிக் ஆசிட் நிறைந்த கிளின்சரைப் பயன்படுத்துங்கள்.

ஸ்கரப்

சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் அரனைத்தும் வெளியேறி, சருமத்தின் நிறம் மேம்பட்டு காணப்படும். மேலும் ஸ்கரப் செய்வதற்கு சிறந்த நேரம் இரவு தான். இரவு நேரத்தில் சரும செல்கள் புதுப்பிக்கப்படுவதால், இரவில் ஸ்கரப் செய்வது நல்லது. சில ஆண்கள் தினமும் ஸ்கரப் பயன்படுத்துவார்கள். இப்படி தினமும் பயன்படுத்தினால் சருமத்துளைகள் தான் பாதிக்கப்படும். ஆகவே வாரத்திற்கு 2 முறை ஸ்கரப் செய்வது நல்லது.

படுக்கும் முன் முகம் கழுவாமல் இருப்பது

சில ஆண்கள் இரவில் படுக்கும் முன் முகத்தைக் கழுவமாட்டார்கள். ஆனால் இப்படி கழுவாமலேயே இருந்தால், சருமத்துளைகளை அடைத்துள்ள அழுக்குகள் அப்படியே படிந்து, நாளடைவில் அது சருமத்தில் முகப்பருக்களையும், முகத்தை பொலிவின்றியும் வெளிப்படுத்தும். எனவே தினமும் படுக்கும் முன் முகத்தை கழுவாமல் படுக்காதீர்கள்.

ஈரப்பதமிக்க டிஸ்யூ பேப்பர்கள்

ஈரப்பதமிக்க டிஸ்யூ பேப்பர்களில் கலந்துள்ள வாசனையூட்டும் கெமிக்கல்களை அளவுக்கு அதிகமாக முகத்தில் பயன்படுத்தினால், அதனால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை முற்றிலும் நீக்கப்பட்டு, முகத்தில் வறட்சி ஏற்பட்டு, அதனைத் தொடர்ந்து அரிப்புக்கள் ஏற்படும். எனவே முகத்தை சுத்தம் செய்கிறேன் என்று ஈரப்பதமிக்க டிஸ்யூ பேப்பர்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தாதீர்கள்.

சுடுநீரில் கழுவுவது

குளிர்காலத்தில் சுடுநீரைத் தான் பெரும்பாலானோர் பயன்படுத்துவார்கள். ஆனால் அப்படி சுடுநீரை முகத்திற்கு அதிகம் பயன்படுத்தினால், அதனால் சருமத்தில் வறட்சி அதிகரித்து, அதன் மூலம் சருமத்தில் சுருக்கங்களும் அதிகமாகும். வேண்டுமெனில் வெதுவெதுப்பான நீரில் அல்லது குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவலாம்.

[img]http://i2.wp.com/tamil.boldsky.com/img/2015/06/10-1433924403-6-facewash.jpg?w=702[/img]

Related Posts

About The Author

Add Comment