சகிப்பின்மை குறித்துக் கருத்துத் தெரிவித்த அமீர்கானின் விளம்பரத் தூதுவர் ஒப்பந்தம் ரத்து

சகிப்பின்மை குறித்துக் கருத்துத் தெரிவித்த அமீர்கானின் விளம்பரத் தூதுவர் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

அண்மையில் நாட்டில் சகிப்பின்மை குறைந்துள்ளது என்றும், இதனால் இந்தியாவில் வாழ அச்சம் ஏற்பட்டு உள்ளது என்றும் பிரபல இந்தி நடிகர் அமீர்கான் கருத்துத் தெரிவித்திருந்தார். அதோடு, தமது மனைவி தம்மிடம்
குழந்தைகளை அழைத்துக்கொண்டு வேறு நாட்டுக்கு சென்றுவிடலாமா என்று அச்சத்துடன் கேட்டதாகவும் அமீர்கான் வேதனை தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது ஒருபுறம் இருக்க, இப்போது அமீர்கானின் விளம்பர பட ஒப்ந்தங்கள் பலவும் ரத்தாகி உள்ளன.இதில் மேக் இன் இந்தியாத் திட்டம் உள்ளிட்ட சமூக விளம்பரங்களின் தூதுவராக
நியமிக்கப்பட்டு இருந்த அமீர்கானின் தூதுவர் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.மேலும்,ஸ்னாப் டீல் ஒப்பந்தம் உள்ளிட்ட பல விளம்பர ஒப்பந்தங்கள் ரத்தாகி உள்ளதோடு,புதிய விளம்பர ஒப்பந்தங்களும்
அமீர்கானுக்கு போடப்படவில்லை என்பதுக் குறிப்பிடத் தக்கது.

Related Posts

About The Author

Add Comment