இனந்தெரியாதோரின் சாட்சிகளுக்கு அமைய இராணுவத்தினரை குற்றவாளிகளாக்க முடியாதாம்!

நாட்டில் தீவிரவாதத்தை ஒழித்து மக்களுக்கு சுதந்திரத்தை வென்று கொடுத்த இராணுவ வீரர்களை யுத்தக் குற்றவாளிகளாக்க இடமளிக்க முடியாது என, பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் சயித் ராஅத் அல் ஹூ​சைனின் இலங்கை விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தில், இன்று (08) கடிதம் ஒன்றை கையளிக்க வந்த வேளை, ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இனந்தெரியாதவர்கள் வழங்கும் சாட்சிகளுக்கு அமைய இராணுவ வீரர்கள் மீது இவ்வாறு குற்றம்சுமத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை விடுவித்து இராணுவ வீரர்களை குற்றவாளிகளாக்கும் பயணத்திற்கு உண்மையில் எதிர்ப்பை வௌியிட வேண்டும் எனவும் பந்துல குணவரத்தன கூறியுள்ளார்.

இதன்போது, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் 12,000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டதாக, அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறிய கருத்து தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பந்துல குணவர்த்தன, அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் எனவும் குற்றம் இழைத்தவர்கள் சிறைகளில் இருப்பதாகவும் கூறினார்.

Related Posts

About The Author

Add Comment