ஐநா அலுவலகத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் கடிதம் சமர்ப்பிப்பு

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தில் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்த்தன, குமார வெல்கம உள்ளிட்ட குழுவினர் இதில் கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயித் ராத் அல் ஹூசைனை சந்தித்துக் கலந்துரையாடுவது தொடர்பில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் முன்வைத்த கோரிக்கைக்கு இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

Related Posts

About The Author

Add Comment