அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கருத்துக்கு ராஜித்த மறுப்பு

ஓளடத கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர், உரிய நடைமுறைகள் இன்றி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்தை முற்றிலும் நிராகரிப்பதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த இருவரும் தமது இராஜினாமாக் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக, அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், இந்த இராஜினாமாக் கடிதம் தொடர்பில் இதுவரை எந்தவொரு இறுதி இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என, அவர் கூறியுள்ளார்.

ஓளடத கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர், உரிய நடைமுறைகள் இன்றி நீக்கப்பட்டுள்ளதாக, அண்மையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம்சாட்டியது.

எனினும் அவ்வாறு இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ள ராஜித்த சேனாரத்ன, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசியல் நோக்கங்களுக்காக தெரியாத விடயங்கள் பற்றி ஊடகங்களுக்கு முன் கருத்து வௌியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts

About The Author

Add Comment