சரிதா நாயரின் நிர்வாணப் படங்களை வாட்ஸ் ஆப்பில் பரப்பிய காங்கிரஸ்

என்னுடைய நிர்வாண காட்சிகளை காங்கிரஸ் கட்சியினர்தான் வாட்ஸ் ஆப்பில் பரப்பினர் என்று சரிதாநாயர் விசாரணை கமிஷனில் கூறினார்.

சோலார் பேனல் மோசடி தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி சிவராஜன் கமிஷன் முன் சரிதா நாயர் வாக்குமூலம் அளித்து வருகிறார். நேற்று முன்தினம் 8வது நாளாக வாக்குமூலம் அளித்தார்.

அப்போது அவர் கூறியது: எனது சோலார் நிறுவனத்திற்கு கேரளாவில் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் உதவி உள்ளனர். அதேபோல் எனது நிறுவனத்தின் வீழ்ச்சிக்கும் சில அரசியல் பிரமுகர்கள் காரணமாக இருந்துள்ளனர். எர்ணாகுளம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ.வான ஹைபி ஈடனுடன், நான் எனது சோலார் தொழில் சம்பந்தமாக எதுவும் பேசியது இல்லை.

அவருடன் மற்ற விஷயங்கள் குறித்துதான் பேசியிருக்கிறேன். அது என்ன விவரம் என்று வெளிப்படையாக கூறமுடியாது. கேரளாவில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சோலார் பேனல் அமைக்க பொலிஸ் சங்கத்தினர் என்னிடம் ரூ.40 லட்சம் கேட்டனர். ஆனால் என்னிடம் பணம் இல்லாததால் ரூ.20 லட்சம் மட்டுமே கொடுக்க முடிந்தது. கடந்த வருடம் வாட்ஸ் ஆப்பில் என்னுடைய நிர்வாண காட்சிகள் பரவின. இந்த காட்சிகளை பரப்பியது ஆலப்புழாவில் உள்ள சில காங்கிரஸ் தலைவர்கள் தான் என எனக்கு நன்றாக தெரியும்.

வாட்ஸ் ஆப்பில் என் நிர்வாண காட்சிகளை பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி நான் பொலிஸில் புகார் கொடுத்தேன். பொலிஸ் நடத்திய விசாரணையில் ஆலப்புழாவில் உள்ள சில காங்கிரஸ் பிரமுகர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் தலையிட்டு விசாரணையை முடக்கி விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts

About The Author

Add Comment