பொன்சேகா சத்தியப்பிரமாணம்

பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா இன்று சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

மறைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.ஏ.டீ.எஸ்.குணவர்த்தனவின் ஆசனத்துக்கே பொன்சேகா தெரிவாகியுள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா கடந்த 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டதன் மூலம் அரசியலில் பிரவேசித்தார்.

அந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய அவர், பின்னர் ஜனநாயகக் கட்சியை உருவாக்கினார். மேலும் கடந்த 2015ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தனது ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட அவரால் வெற்றிபெற முடியவில்லை.

பின்னர், அண்மையில் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டது.

இந்தநிலையில், நேற்றைய தினம் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, வெற்றிடமாகவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தை பொன்சேகாவுக்கு வழங்க ஏகமனதாக தீர்மானித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

About The Author

Add Comment