சிசில் கொத்தலாவலவை தேசிய வைத்தியசாலைக்கு மாற்ற உத்தரவு

செலின்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக இருந்த சிசில் கொத்தலாவலவை எதிர்வரும் 23ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வழக்கு இன்று (09) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, பிரதிவாதி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, சிசில் கொத்தலாவல தற்போது சுகயீனம் காரணமாக, தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டார்.

இதனையடுத்து அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரயந்த லியனகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோல்டன் கீ நிறுவன மோசடி தொடர்பில் மேல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், லலித் கொத்தலாவலவின் மனைவியான சிசில் கொத்தலாவல வௌிநாடொன்றில் இருந்து இலங்கை திரும்பிய போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, அண்மையில் கைது செய்யப்பட்டார்.

குடி வரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இவர், குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, பின்னர் சுகயீனம் காரணமாக அவர் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

About The Author

Add Comment