முறிந்து போன 2 வருட காதல்! கோஹ்லி- அனுஷ்கா உறவில் பிளவு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி- பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் 2 வருட காதல் முறிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார். இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்தனர்.

கோஹ்லியின் ஆட்டத்தை பார்க்க அனுஷ்காவும் மைதானத்திற்கு அடிக்கடி செல்வார். அதேபோல் கோஹ்லியும் அனுஷ்காவின் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வார்.

2015ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிக்கு முன்னால் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது கூட அவரது ஆட்டத்தை ரசிக்க அனுஷ்கா சர்மா அவுஸ்திரேலியாவுக்கு சென்று இருந்தார்.

இவ்வாறு கோஹ்லி போட்டியில் கலந்து கொள்ளும் இடங்களுக்கு அனுஷ்கா சர்மா செல்வதால் அவரது ஆட்ட திறன் பாதிக்கப்படுவதாக கூட பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் கோஹ்லி- அனுஷ்கா காதல் முடிவுக்கு வந்து விட்டதாக பிரபல பாலிவுட் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் கூறியுள்ளதாவது,

திருமணம் தான் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது. இருப்பினும் இது அவர்களின் திடீர் முடிவு இல்லை. நன்கு யோசனை செய்த பிறகே இந்த முடிவை எடுத்துள்ளனர்.

கோஹ்லி தற்போது வரை தெளிவாக இல்லை. அதேசமயம் அனுஷ்கா மிகவும் பிஸியாக உள்ளார். இருவரும் பிரிந்தால் காதலித்து பிரிந்தவர்கள் வரிசையில் இவர்களும் இணைந்து விடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Related Posts

About The Author

Add Comment