மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசி தாக்குதல்?

இராமேஸ்வரத்தில் இருந்து 600க்கும் மேற்பட்ட படகுகளில் 2000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை இலங்கை கடற்படையினர் கல் வீசி தாக்கியுள்ளனர் என தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

மேலும், இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகள் மீது மோதி சேதப்படுத்தியதோடு, வலைகளையும் அறுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து இராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல், கரை திரும்பினர். இதில் பலரது வலைகள் அறுக்கப்பட்டதால், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறினர்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை சென்று திரும்பி இரண்டு நாள் கூட ஆகாத நிலையில் தங்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியது மிகவும் வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தனர் என, தமிழக ஊடகமான நக்கீரன் குறிப்பிட்டுள்ளது.

Related Posts

About The Author

Add Comment