பிணையில் விடுவிக்கப்பட்ட ஞானசார தேரர் மீண்டும் விளக்கமறியலில்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதிமன்றத்தில் இடம்பெற்ற வேளை, சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக, ஞானசார தேரர் மீது குற்றம்சுமத்தப்பட்டது.

அவர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்ததன் மூலம், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக, சட்டத்தரணிகளால் நீதவானிடம் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, தேரரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்த அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் அவருக்கு இன்று ஹோமாகம நீதிமன்றம் பிணை வழங்கியது.

எதுஎவ்வாறு இருப்பினும் சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவரை நாளை வரை விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்பட்டு ஞானசாரவுடன் கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேகநபர்கள் அறுவரை, எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Posts

About The Author

Add Comment