விதிகளை மீறும் தனியார் பயணிகள் பேருந்து சாரதிகள் மீது நடவடிக்கை!

போக்குவரத்து விதிகளை மீறும் தனியார் பயணிகள் பேருந்து சாரதிகள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தனியார் போக்குவரத்து சங்க தலைவரும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய நா.வேதநாயகன் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் பேருந்து சாரதிகளால் பாரிய விபத்துக்கள் ஏற்படுவதை அவதானிக்க முடிகிறது.

எனவே, இனிவரும் காலங்களில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு அமைவாக வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளை கேட்டுக்கொள்வதுடன் அவ்வாறு விதிகளை மீறி செலுத்தும் சாரதி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதுடன் வாகன அனுமதிப்பத்திரமும் எதிர்வரும் காலங்களில் இரத்து செய்யப்படுமென தெரிவித்தார்.

எனவே யாழ் மாவட்டத்தில் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் பேருந்துகளின் சாரதிகள் உரிய வீதி போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து பயணிகளுக்கு இடையூறு விளைவிக்காத வண்ணம் தமது பயணங்களை மேற்கொள்ளவும் என அவர் மேலும் தெரிவித்தார்.

[b]AR/SPR_dmu_jaffna[/b]

Related Posts

About The Author

Add Comment