உள்ளூராட்சித் தேர்தலை ஜூனில் நடத்த முழு முயற்சி எடுக்கப்படும்

உள்ளூராட்சித் தேர்தலை பிற்போடுவதற்கு எவ்வித அவசியமும் இல்லை என்றும்  எதிர்வரும் ஜூன் மாதம் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் குறித்த நேரத்தில் தேர்தலை நடத்தி முடிக்க முயற்சி செய்யப்படும் என்றும் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இன்று (09) தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று (09) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான எல்லை நிர்ணயம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நான் பாரிய பிரச்சினையொன்றை ஏற்றுகொண்டுள்ளேன். சிக்கலாகிய நூற்பந்து. இச்சிக்கலை தீர்க்க சில காலம் தேவைப்படுகிறது. விரைவில் தேர்தலை நடத்த முழுமையான முயற்சியை மேற்கொள்வேன்.  தாமதப்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதியும் பிரதமரும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

உள்ளூராட்சித் தேர்தல் தொகுதிவாரியாகவே நடத்தப்படும். அதனால் புதிய கட்சிகள் அமைக்கப்பட்டு பிரயோசனம் இல்லை. அதனால் கட்சியை உடைக்க முயற்சிக்க வேண்டாம். பழைய முறைக்கே உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது என்பது மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம். கிராமத்துக்கு பொறுப்புகூறும் பிரதிநிதியை தெரிவுசெய்யும் தேர்தல் முறைக்கு ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

இதுவரை 2000 முறையீடுகள் கிடைத்துள்ளன. பாரிய சவாலாகவுள்ளது. சவாலுக்கு பொருத்தமான தீர்வை கண்டெுத்து தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளேன். நானோ, ஜனாதிபதியோ தேர்தலை நடத்த தாமதிக்கவில்லை. அவ்வாறு செய்ய எவ்வித அவசியமும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

[b]AR[/b]

Related Posts

About The Author

Add Comment