வெல்லம்பிட்டிய முக்கொலை தொடர்பில் பல பிரிவுகள் விசாரணை

முச்சக்கர வண்டியில் வந்த மூன்று சந்தேகநபர்களே, வெல்லம்பிடிய பகுதியில் இடம்பெற்ற முக்கொலைக்குக் காரணம் என, தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு வெல்லம்பிடிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்தனர்.

24 வயதான சாலிக நிபுண நிராஜ், 49 வயதான மொஹமட் சுபைர் மொஹமட் ரிஷ்மி மற்றும் அவரது மகளை திருமணம் செய்துள்ள 19 வயதான தரிந்து தில்ஷான் சேனாரத்ன ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வெல்லம்பிடிய பொலிஸின் சில பிரிவுகளால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சம்பவத்தில் பலியானவர்களின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Posts

About The Author

Add Comment