இலங்கைக்கு 31 மில்லியன் டொலர்களை வழங்க அமெரிக்கா யோசனை

இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க மற்றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளிற்காக 31 மில்லியன் அமெரிக்க டொலர்களை (210.49 கோடி ரூபா) ஒதுக்கும் யோசனையை அமெரிக்க அரசாங்கம் முன்வைத்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி அந்த நாட்டின் காங்கிரசிற்கு அனுப்பி வைத்துள்ள வரவு செலவுத் திட்ட யோசனையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பொதுத் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களிற்கு பின் இலங்கைக்கான அமெரிக்க உதவி புதிய யுகத்தில் நுழைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

About The Author

Add Comment