தேரவாதி பௌத்த கதிகாவத் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது

தேரவாதி பௌத்த கதிகாவத் பதிவு செய்தல் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்கள் அரசியலமைப்பிற்கு மாற்றமானதாக இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக அதை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் மற்றும் மக்கள் கருத்துக் கணிப்புக்களின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

எனினும் அரசியலமைப்பிற்கு பொருத்தமற்ற பகுதிகளை நீக்குவதாக இருந்தால் சாதாரணமான பெரும்பான்மை ஆதரவுடன் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று உயர்நீதிமன்ற தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் மேலும் சுட்டிக்காட்டி இருந்தார்.

Related Posts

About The Author

Add Comment