15 வயது சிறுவன் சடலமாக மீட்பு – துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டாரா?

இரத்தினபுரி – கல்இன்ன – மாரபன பகுதியில் இருந்து 15 வயதுடைய சிறுவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று (10) காலை கண்டெடுக்கப்பட்ட இந்த சடலத்தில் கைகள் இரண்டும் துணியால் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாகவும், சந்தேகத்திற்கிடமான முறையில் இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இரத்தினபுரி நீதவானால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எதுஎவ்வாறு இருப்பினும் சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

About The Author

Add Comment