வடக்கு விவசாய அமைச்சருக்கு எதிரான யோசனை ஏகமனதாக நிறைவேற்றம்

வட மாகாண சபை விவசாய அமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வட மாகாண சபை விவசாய அமைச்சர் ஐங்கரநேசனின் செயற்பாடுகள் தொடர்பில் முதலமைச்சர் தலையிட்டு உடனடியாக விசாணை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டே இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

வட மாகாண சபையின் உறுப்பினர் ஜீ.டி.லிங்கநாதனால் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண சபையின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ள போதும், அமைச்சரால் விவசாய பிரிவை முன்னேற்ற எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஏனைய உறுப்பினர்கள் முன்வைத்த எந்தவொரு கோரிக்கைகளையும் அமைச்சர் கருத்தில் கொள்ளவில்லை எனவும், தனது விருப்பப்படி மட்டுமே செயற்படுவதாகவும் அந்த யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

About The Author

Add Comment