யோசித்த உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் யோசித்த ராஜபக்ஷ, நிஷாந்த ரணதுங்க, ரோஹன வெலிவிட்ட உள்ளிட்ட ஐவர் அண்மையில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இதனையடுத்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர்களை, மீண்டும் கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை எதிர்வரும் 25ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Posts

About The Author

Add Comment