புதிய அரசயலமைப்புக்கு மன்னார் மக்களின் கருத்துக்கள் பதிவு

புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்களின் கருத்திணை அறியும் குழு நேற்று புதன்கிழமை (10) காலை அதன் பதிவுகளை மன்னார் மாவட்ட செயலகத்தில் ஜய்கா மண்டபத்தில் மேற்கொண்டது.

லால் விஜயநாயக்க தலைமையில் பதிவுகளை மேற்கொண்ட குழுவில் எஸ்.தவராசா மற்றும் விஜயசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பதிவுகளை மேற்கொண்டனர்.

நேற்று புதன்கிழமை காலை 9:30 மணிமுதல் மாலை 4:30 வரை மக்கள் கருத்துக்கள் மேற்கொள்ளபட்டன.

இதேவேளை மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நந்தினி ஸ்டான்லி டி மெல், உதவி மாவட்ட செயலாளர் பவாகரன் ஆகியோரும் கலந்து கொன்டனர்

தமிழ் மக்களின் நிரந்தர தீர்வு தொடர்பாக புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் சேர்க்கப்பட வேண்டிய ஆலோசணைகள் பெறுவது தொடர்பாக மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களிலும் இருந்து வந்திருந்த மக்கள் தமது கருத்தினை குழு முன்னிலையில பதிவுசெய்தனர்.

அதன்படி வடக்கில் அனைத்து மக்களும் சமத்துவத்துடன் வாழும் வகையில் சமஷ்டி அரசியல் அமைப்பு முறை உருவாக்கப்படவேண்டும், வட மாகாண சபை சுயமாக இயங்க முடியாமை, புதிய தேர்தல் முறையின் அடிப்படையில் பிரதேச சபைகளின் எல்லை நிர்ணயம் நீதியாக முறையில் ஏற்படுத்தபடவேண்டும், சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலையயை துரிதபடுத்த நடவடிக்கை எடுத்தல் அல்லது சட்டரீதியாக தண்டிக்கப்படல் என்பன விரைவில் நடைமுறைபடுத்தபடுவேண்டும், அந்திய மீனவர்களின் வருகையை தடுக்கும் சட்டம் அமுல்படுத்தப்படவேண்டும், உள்நாட்டில் இடம் பெயர்ந்து வாழ்பவர்களின் மீள்குடியேற்றம், இராணுவத்தினரினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவித்து உரிய மக்கள் குடியேற நடவடிக்கை எடுத்தல், இந்திய வீத்திட்டுத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் நீக்கப்பட்டு நீதியான முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுதிட்டம் வழங்கப்படவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமது பதிவுகளை முன்வைத்தனர்.

Related Posts

About The Author

Add Comment