இராணுவ தொண்டர் படையணியின் புலமைப்பரிசில் வழங்கும் வைபவம்!

இலங்கை இராணுவ தொண்டர் படையணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட புலமைப்பரிசில்கள் வழங்கும் வைபவத்தில் பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்பத்தில் நேற்று முந்தினம் (09) நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் யுத்த வீரர்களின் குடும்பங்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் வகையில் பொதுத் தேர்வுகளில் சித்தியடைந்த 566 மாணவர்களுக்கு ரூபா 10.8 பெறுமதியான நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.

மேலும், ஜந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த 274 பிள்ளைகளுக்கு தலா 15,000.00 ரூபவாவும், உயர் தர பரீட்சையில் சித்தியடைந்த 261 மாணவர்களுக்கு தலா 20,000.00 ரூபவாவும், பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 31 மாணவர்களுக்கு தலா 50,000.00 ரூபாவும் பாதுகாப்புச் செயலாளரினால் அடையாளபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், யுத்த வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியினரினால் எடுத்த முயற்சிகளுக்கு தனது பாராட்டினைத் தெரிவித்தார். அத்துடன் விளையாட்டுக்களின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தியதுடன் கல்வியுடன் விளையாட்டினையும் சேர்த்து செய்யுமாறு பெற்றோர்களிடம் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றல்களை வெளியே கொண்டு வந்து விருத்தி செய்வது பெற்றோர்களின் கடமை எனவும் தெரிவித்தார். அத்துடன் நாட்டின் எதிர்கால சிறந்த தலைவர்களாக வருவதற்கு கடுமையாக பாடுபடவேணும் எனக் கேட்டுக்கொண்டார். இலங்கை இராணுவ தொண்டர் படையணி 134 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றினைக் கொண்டுள்ளது. இப்படையணில் 100 பெட்டாலியன்களின் கீழ் 65,000 படையினர் உள்ளனர்.

கடந்த மனிதாபிமான நடவடிக்கைளின் போது 140 அதிகாரிகள் மற்றும் 3728 படையினரும் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் 168 அதிகாரிகள் மற்றும் 3642 படையினரும் அங்கவினமுற்றுள்ளனர்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. வசந்த குணவர்தன, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா, இலங்கை இராணுவ தொணடர் படையணியின் கெமெடான்ட் மேஜர் ஜெனரல் எச்.சீ.பீ. கணதிலக, பிரதி கொமெடான்ட், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், யுத்த வீரர்களின் குடுமப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

[b]BPK/MOD[/b]

Related Posts

About The Author

Add Comment