வடகொரியாவுக்கு இலங்கை கண்டனம்!

வடகொரிய கடந்த ஞாயிற்றுக்கிழமை நீண்டதூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணையை பரிசோதித்தமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படும் வகையில் சர்வதேச கட்டுப்பாடுகளை மீறி எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என வடகொரியாவை கேட்டுக்கொள்வதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடகொரியா கடந்த 7ம் திகதி உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி நெடுந்தூரம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

About The Author

Add Comment