சிறுநீரக நோய் காணப்படும் பகுதிகளில் சுத்தமான நீரை வழங்க நடவடிக்கை

சிறுநீரக நோய் பரந்த அளவில் காணப்படும் பகுதிகளில் மக்களுக்கு சுத்தமான நீரை பெற்றுக் கொடுப்பது தொடர்பான, வேலைத் திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் ஐந்து மாவட்டங்களில் இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக, அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

07 பில்லியன் ரூபாய் செலவில் மூன்று கட்டங்களாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதோடு, இதன் முதல் கட்டம் எதிர்வரும் 13ம் திகதி வெலிகந்த பிரதேச செயலகப் பிரிவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

Related Posts

About The Author

Add Comment