பிரதமர் நாளை விஷேட உரை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நாளை ஊடகங்களுக்கு விஷேட உரையொன்று நிகழ்த்தப்படவுள்ளது.

நாளை பகல் 1.00 மணிக்கு பதுளையிலிருந்து இந்த விஷேட உரையை நிகழ்த்தவுள்ளதாக பிரதமர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

நாளை மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மல்வத்து அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர்களையும் சந்திக்கவுள்ளார்.

இதுதவிர மறைந்த முன்னாள் ஜனாதிபதி டீ.பி. விஜேதுங்கவின் நூறாவது பிறந்த தின நிகழ்வுகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை கண்டியில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட விஜயமாக இன்று காலை இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

Related Posts

About The Author

Add Comment