தேசிய கொடியை ஏற்ற மறுக்கவில்லை; பொய்ப் பிரச்சாரம் – விஜயகலா மஹேஷ்வரன்

தேசிய கொடியை ஏற்ற மறுத்தாரா விஜயகலா மஹேஷ்வரன் யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.

அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போதே விமல் வீரவன்ச இந்த விடயத்தை தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அத தெரண செய்திப்பிரிவு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரனிடம் வினவிய போது, அவ்வாறான ஒரு விடயம் இடம்பெறவில்லை எனத் தெரிவித்தார்.

யாழில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின் போது யாரும் எனக்கு தேசிய கொடியை ஏற்றுமாறு கூறவோ அல்லது தான் சிய கொடியை ஏற்றுவதற்கு மறுக்கவோ இல்லை எனக் கூறினார்.

இது வெறும் உண்மைக்கு புறம்பான இனவாதத்தை தூண்டும் செய்தி என்றும் இது தொடர்பில் தான் எதிர்வரும் தினங்களில் பாராளுமன்றில் உரையாற்ற உள்ளதாகவும் கூறினார்.

Related Posts

About The Author

Add Comment