நியூஸிலாந்து பிரதமர் இலங்கை வருகிறார்

நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 23ம் திகதி அவர் இலங்கை வரவுள்ளதாக இலங்கைக்கான நியூஸிலாந்து தூதரக பேச்சாளர் ஒருவர் கூறினார்.

நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ 03 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்க உள்ளதுடன் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

நியூசிலாந்து முதலீட்டு நிறுவனங்கள் மேற்கொள்கின்ற விவசாய வேலைத் திட்டங்களை நியூஸிலாந்து பிரதமர் ஆரம்பித்து வைக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதவிர இலங்கையிலுள்ள நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் க்ரஹம் மோர்டன் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை அண்மையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

Related Posts

About The Author

Add Comment