நாட்டிற்குள் ஸிக்கா வைரஸ் தொற்றியுள்ள ஒருவர் வந்தால் என்ன செய்வேண்டும்?

ஸிக்கா வைரஸ் தொற்றியுள்ள ஒருவர் நாட்டிற்குள் பிரவேசிக்கும் போது எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று விமானநிலைய உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார தரப்புகளுக்கும் வைத்தியசாலைகளுக்கும் இந்த அறிவுறுத்தல்கள் சுகாதார அமைச்சின் ஊடாக விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஸிக்கா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் இதுவரை பதிவாகவில்லை. எனினும் பிரேஸில் உள்ளிட்ட அதன் அயல் நாடுகளில் ஸிக்கா வைரஸ் வேகமாக பரவிவருகின்றது.

இந்த நிலையில் ஸிக்கா வைரஸ் பரவியுள்ள நாடுகளில் இருந்து எவரேனும் இலங்கைக்குள் பிரவேசித்தால், அதுகுறித்து உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விமான நிலையம், சுகாதார தரப்புகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளரான விசேட நிபுணர் டொக்டர் பபா பலிஹவடன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

About The Author

Add Comment