அனுமதியின்றி மஹிந்த கட்சிக் கூட்டங்களை நடாத்துகின்றார்!

அனுமதி எதுவுமின்றி குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ கட்சிக் கூட்டங்களை நடாத்துவதாக ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடன் இவ்வாறு மஹிந்த சந்திப்பு நடத்தி வருகின்றார். மாவட்ட ரீதியாக அழைக்கப்பட்டு சந்திப்பு நடத்துகின்றார்.

இவ்வாறு கூட்டங்களை நடாத்துவதற்கு சுதந்திரக் கட்சி எவ்வித அனுமதியையும் வழங்கவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச ஆங்காங்கே நடத்தி வரும் கூட்டம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனுமதியைப் பெற்றுக்கொண்ட கூட்டங்கள் அல்ல.

இந்தக் கூட்டங்கள் மஹிந்தவின் தனிப்பட்ட ரீதியான சந்திப்புக்களாகும். எந்தவொரு நபரும் தாம் விரும்பிய ஒருவரை சந்திக்க எவ்வித தடையும் கிடையாது.

எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பயன்படுத்தி கூட்டங்களை அனுமதியின்றி நடாத்த முடியாது அதற்கு இடமளிக்கப்படவும் மாட்டாது என துமிந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts

About The Author

Add Comment