லட்சுமிமேனனை வீட்டுக்கு அனுப்பிய காலேஜ்

ஐயோ பாவம்… ஒரு நடிகை ஒரே இயக்குனரின் படத்தில் அடுத்தடுத்து நடித்தால் என்ன வருமோ? அதுதான் கிடைத்திருக்கிறது லட்சுமிமேனனுக்கு!

குட்டிப்புலி முத்தையாவின் படத்தில் மூன்றாவது முறையாக நடிக்கப் போகிறார். நடுவில் ஒரு படத்தில் இவரை கமிட் பண்ணினார் முத்தையா. படத்தின் ஹீரோ விஷால் காட்டிய எதிர்ப்பு காரணமாக விலகிக் கொண்டார் லட்சுமி.

“என்னம்மா… நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கன்னு இன்டஸ்ட்ரியே சொல்லுது” என்று லட்சுமியை மடக்கினால் முகத்தில் ஒரு ஷாக்கும் இல்லை அங்கு! “ஆமாம்… நானும் கூட அப்படி பேசிக்கிறாங்கன்னு கேள்விப்பட்டேன். நான் அவரை லவ் பண்ணல. பட்… அவரை என்னை லவ் பண்றாரான்னு எனக்கு தெரியாது” என்றார்.

அதைவிட பெரிய விஷயம் இன்னொன்று. கல்லூரியில் சேர்ந்தாரல்லவா? தொடர் விடுமுறை காரணமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டாராம். இப்போ ஓப்பன் யுனிவர்சிடியில் படிக்கிறேன் என்றார். கலைச்சேவை செய்ய எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு?

Related Posts

About The Author

Add Comment