தெற்கு அதிவேகப் பாதையில் சென்ற வேன் தீப்பற்றியது

தெற்கு அதிவேகப் பதையில் வெலிப்பனையில் இருந்து கடவத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தீப்பற்றியுள்ளது.

இன்று நண்பகல் 12.00 மணியளவில் தெற்கு அதிவேகப் பதையின் வெலிப்பன மற்றும் தொடங்கொடைக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் 39வது கிலோமீற்றர் கட்டைக்கு அருகில் குறித்த வேன் தீப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.

சம்பவத்தையடுத்து தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்துள்ளனர்.

குறித்த வேனில் சாரதி மாத்திரம் இருந்துள்ளதுடன் அவருக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related Posts

About The Author

Add Comment