இலஞ்சம் பெற்ற அதிகாரி வசமாக சிக்கினார்

வீட்டுத் திட்டம் ஒன்றிற்கு அனுமதி வழங்குவதற்காக 50,000 ரூபா இலஞ்சமாக பெற்றுக் கொண்ட மஹரகம நகர சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று பகல் அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரிடம் இருந்து அந்தப் பணத் தொகையை பெற்றுக் கொள்ளும் வேளை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Posts

About The Author

Add Comment