07 பேரின் கட்சி உறுப்புரிமை இரத்து; ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அதிரடி முடிவு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் 07 பேரின் கட்சி உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் குறித்த 07 பேருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

இன்று (12) பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கட்சியின் தலைமையகத்தில் கூடியிருந்த போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக தனித்து செயற்படுவதற்கு அனுமதி வழங்க முடியாது என்றும் அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

Related Posts

About The Author

Add Comment