நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கே தன்னை மக்கள் தெரிவு செய்துள்ளனர்

தேசிய பொருளாதாரத்திற்கோ தேசிய கலாச்சாரத்திற்கோ குந்தகம் ஏற்படுத்தும் எந்தவொரு ஒப்பந்தமும் எந்தவொரு நாட்டுடனும் மேற்கொள்ளப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.,

இந்தியாவுடன் மேற்கொள்ளப்படவுள்ள ஒப்பந்தம் சம்பந்தமாக அரசியல் எதிரிகள் வெவ்வேறான பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பலாங்கொடையில் இடம்பெற்ற தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

மக்கள் தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்திருப்பது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு என்றும் அரசியல் எதிரிகள் கூறுவது போன்று நாட்டை அழிப்பதற்கல்ல என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

எந்த வௌிநாட்டு சக்திகளுக்கும் அடிபனியாமல் நாட்டினது கௌரத்தை பாதுகாப்பதற்கு உயிரையும் அர்ப்பணிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.,

Related Posts

About The Author

Add Comment