இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு சர்வதேச ரீதியாக வரவேற்பு

இலங்கை நாட்டின் மீதுள்ள பொறுப்புகூறல் மற்றும் நல்லிணக்கம் என்பது தற்போது சர்வதேச நாடுகளுக்கிடையில் வரவேற்கதக்கதாக அமைந்துள்ளது என வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

எமது நாட்டின் தலைமைத்துவத்தினை எற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தூர நோக்கத்தின் அடிப்படையில் பொறுப்பு கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்ற செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது பல நாடுகளுக்கிடையில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதன் ஊடாக மக்களுக்கான சிறந்த பணிகளை முன்னெடுப்பதற்கு வழி வகுக்கும் எனவும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இலங்கையின் சுதந்திர தினத்தில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் பாடப்பட்டுள்ளது.

இவ்வாண்டு தேசிய கீதம் தழிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் பாடப்பட்ட விடயம் பல்வேறு நாடுகளுக்கு எடுத்துக்காட்டக அமைந்துள்ளது என்றார்.

இலங்கை மக்களின் நல்லிணக்கப் பொறிமுறை செயற்பாடுகளுக்கு மக்களிடம் இருந்து ஆலோசனை பெறுவதற்கான இணையத்தள அங்குராப்பண நிகழ்வு நேற்று யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரசிங்க தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்தார்.

Related Posts

About The Author

Add Comment