2015ம் ஆண்டு அதிவேகப் பாதையில் 50,000 வழ்ககுகள்

2015ம் ஆண்டின் தெற்கு அதிவேகப் பாதை மற்றும் கட்டுநாயக்க அதிவேகப் பாதை ஆகியவற்றில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் அது சம்பந்தமான அறிக்கையை இலங்கை பொலிஸ் வௌியிட்டுள்ளது.

தெற்கு அதிவேகப் பாதையில் மாத்திரம் பயங்கர விபத்து சம்பவங்கள் 03 இடம்பெற்றுள்ளன.

அதில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்திருப்பதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதுதவிர தெற்கு அதிவேகப் பாதையில் இடம்பெற்ற விபத்து சம்பவங்களில் சிறு காயங்களுக்கு உள்ளான 55 பேர் பதிவாகியுள்ளதுடன், கட்டுநாயக்க அதிவேகப் பாதையில் 07 பேர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியதாக பதிவாகியுள்ளது.

அத்துடன் தெற்கு அதிவேகப் பாதையில் அதி வேகமாக வாகனங்களை செலுத்திய மற்றும் ஏனைய குற்றங்கள் தொடர்பாக 32,263 வழக்குகளும், கட்டுநாயக்க அதிவேகப் பாதையில் 18,423 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts

About The Author

Add Comment