25 கோடி ரூபாய் பெறுமதியான 25 இலட்சம் கிலோ பாவனைக்குதவாத அரிசி மீட்பு

காலி, பூஸ்ஸ பிரதேசத்தில் இருந்த பொன்னி அரிசி களஞ்சியசாலை ஒன்று, காலி மாவட்ட பொது சுகாதார பாரிசோதக அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு புதுக்கடை நீதவானின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனையடுத்து, இன்று சனிக்கிழமை (13) பகல் குறித்த களஞ்சியசாலையை பொது சுகாதார அதிகாரிகள் சோதனையிட்டனர்

அதன்போது 25 கோடி ரூபாய் பெறுமதியான 25 இலட்சம் கிலோகிராம் பொன்னி அரிசி பாவனைக்கு உதவாத வகையில் பழுதடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட குறித்த அரிசி குறித்து அரச பகுப்பாய்வாளர்கள் மற்றும் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அரிசி மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

Related Posts

About The Author

Add Comment