தொல்பொருள் நிலைய பொறுப்பதிகாரியின் சேவை இரத்து

ரிட்டிகல, தொல்பொருள் நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நிதி உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக வைக்கப்பட்டுள்ள ஊண்டியல் சரியான முறையில் பாதுகாக்கப்படவில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக அவரின் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு குறித்த அதிகாரி குற்றவாளியாக இணங்காணப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தொல்பொருள் ஆணையாளர் நாயகம் செனரத் திஸாநாயக்கவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது தவிர தொல்பொருள் நிலையத்தை பார்வையிடுவதற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடம் சட்டவிரோதமான வழிமுறைகளில் பணம் அறவிடப்படுவது குறித்து அறியக்கிடைத்துள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.

Related Posts

About The Author

Add Comment