சர்வதேச பங்களிப்புடன் விசாரணை மேற்கொள்ள எதிர்ப்பில்லை

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச பங்களிப்புடன் விசாரணை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு காட்டவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

எனினும் அந்த விசாரணையின் இறுதி அறிக்கை உள்நாட்டு நீதித்துறையினாலே வௌியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த விசாரணை நடவடிக்கைகளின் போது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடன் அமெரிக்கா மற்றும் மனித உரிமை அமைப்புக்களும் பங்குபற்றலாம் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் இலங்கையின் நீதித்துறை சீர்குலைந்து இருந்ததாகவும் தற்போது அந்த நிலை மாறி இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் இந்த விசாரணைகளின் இறுதி அறிக்கைகள் இலங்கையின் நீதித்துறைக்கு அமைவாகவே வழங்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

நேற்று (12) வௌ்ளிக்கிழமை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியாவின் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோயிலுக்கு வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக நேற்று பிரதமர் இந்தியா சென்றிருந்தார்.

Related Posts

About The Author

Add Comment