திருமலையில் கைக்குண்டு வீசப்பட்ட விவகாரம் – இருவர் கைது

திருகோணமலை – நான்காம் கட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது கைக்குண்டு வீசப்பட்டமை தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 40 மற்றும் 44 வயதுடைய இருவர் எனவும் இன்று (15) இவர்கள் கைதாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

முச்சக்கரவண்டி சாரதி ஒருவருடைய வீட்டின் மீது ஞாயிற்றுக்கிழமை (14) இரவு கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. இவ்வாறு வீசப்பட்ட கைக்குண்டு வீட்டில் பட்டு வெடித்துள்ளது. இதன்போது உயிர் ஆபத்து எதுவும் ஏற்படவில்லையென்பதுடன், வீட்டுக்கு சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த அசம்பாவிதத்துக்கு தனிப்பட்ட பிரச்சினை காரணமென விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related Posts

About The Author

Add Comment